பொருளடக்கத்திற்கு தாவுக
செப்ரெம்பர் 5, 2011 / mullaimaravan

காகித உறவுகள்

அன்புள்ளம் கொண்ட வாசகர்களே, அவசரமாய் பறந்து சுழலும் இந்த வாழ்க்கையின் வேகத்தில் நாம் மறந்து விட்ட சில உறவுகள், நம்மை ஒருநாள் மீண்டும் வருடும்போது, அது நம்மிடையே அளவிட முடியாத ஓர் ஆனந்தத்தை ஏற்படுத்துகிறது. அப்படியான ஒன்றை இதோ உங்களிடத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

 

ஆகஸ்ட் மாதம் கடைசி வாரம், என் நண்பன் ஒருவனுடைய பிறந்தநாள். காலையில் மொட்டை மாடிக்கு புத்தகங்களுடன் படிக்கச்சென்ற எனக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்ற எண்ணம் தான் தலையில் ஓடிக்கொண்டிருந்தது. நினைக்கும் பொருட்களெல்லாம் ஏற்கனவே இருப்பதாக இருந்தது. இதுவே ஒர் பெண்ணிற்கு என்றிருந்தால் கம்மல், ஜிமிக்கி, நெக்லஸ், லிப்ஸ்டிக், கீ செயின்……..என ஒரு பெரிய லிஸ்டே போடலாம், ஆனால் வாலிபர்களான நமக்கு சரக்கு, சைட்டிஸ், கூத்து, கும்மாளம், ஊர் சுற்றல் இவற்றை தவிர வேறென்ன இருக்க என்றே தோன்றியது.

 

மிகுந்த ஆராய்ச்சிக்கு பிறகு ஓர் கடிதம் எழுதலாம் என எண்ணி, என் மனதில் தோன்றிய, என் நண்பனுக்கும் எனக்கும் இடையிலான இனிய தருணங்களை மற்றும் அவனிடம் விரும்பும் மாற்றம்  எனக்கு தெரிந்த எலிய தமிழில் உரைநடையாக எழுதினேன். அதோடு தியானத்தில் இருக்கும் புத்தர் புகைப்படத்தையும் இணைத்து அவனுடைய பிறந்தநாளிற்கு முன்தினம் தபாலில் அனுப்பினேன்.

 

மறுநாள் காலையில் என் நண்பனுடைய வீட்டின் முன் தபால்காரன் வந்ததும், அவனுக்கும் அவனுடைய குடும்பத்திற்கும் ஒன்றும் புரியவில்லை. தகவல் பரிமாற்றம் குறுந்தகவல், மின்னஞ்சல், கைபேசி மற்றும் சமூக வலைதலங்கள் என டிஜிட்டல் மயமான இந்த கால கட்டத்தில், பல காலம் கழித்து தன் வீட்டின் முன் நிற்கும் தபால்காரனை, ஒரு வேற்று கிரகவாசியை போலவே அவன் பார்த்திருக்கக்கூடும். கடிதம் அதுவும் தனிநபருக்கான(Personal)கடிதத்தை வாங்கி படித்த என் நண்பனுக்கு அது அளவிட முடியாத இன்பமாய் அமைந்ததாக கூறினான், அதைக்கேட்ட எனக்கும் அவ்வாறே இருந்தது.

 

கடிதங்கள் ஏற்படுத்தும் தாக்கம் இன்றும் அதன் வசீகரம் குறையாமல் இருப்பதை காணும்போது சற்றே விந்தையாகத்தான் இருக்கின்றது. கடிதம் அனுப்புவதன்மூலம் நமக்கு நெருங்கியவர்களுக்கு தகவல் கொடுப்பது மட்டுமின்றி அவர்களுடைய முகவரியும் உறவும் என்றும் நீங்காது நம் மனத்திலே இருக்கும். கடிதப் போக்குவரத்து இன்று பெறுவாரியாக அலுவல் சம்பந்தமாகவே உள்ளது கவலையளிக்கின்றது. இந்த வலைப்பதிவின் மூலம் வாசகர்களாகிய நீங்கள் முடிந்தவரை உங்கள் நெருங்கியவர்களுக்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்பது என்னுடைய அவா.

ஓகஸ்ட் 18, 2011 / mullaimaravan

Second Independence Movement: Voice of a Slave

Indian-Flag-2

 

Seems there is one more victim to the corruption brigade…disheartened to hear Mr.Manmohan Singh speak in the parliament that OUTSIDE PEOPLE cannot interfer influence in the government affairs….hope the government is FOR THE PEOPLE…if the government is for the goodwill of most people of India…then the Jan lokpal bill drafted by THIS MOST PEOPLE OF INDIA should be implemented….Guess the ministers are afraid of being dragged into a legal tangle in-case the bill is implemented! Seems  Mr. Manmohan Singh has succumbed to the gang of corrupt ministers! I find that somewhere the term DEMOCRACY is being forgot.  Nothing is for sure, even if Mr. Anna Hazare hasn’t got the media attention, maybe he could have been scraped from history….one could easily see the frustration and temperament in our Home minister Mr. Chidambaram’s speech( maybe he would have strangled hazare to death had he the opportunity).

We elect our ministers based on their claim that they would die to serve us and work for our upliftment.  In this democratic country, WE THE PEOPLE are the masters, and if we have the power to elect the ruling body, don’t we have the power the punish the corrupt immediately(I mentioned immediately cause I don’t want you to think of a punishment of just not electing him/her for the next term).

Just rewind some 70years back, we were protesting and struggling against the British because of they were scratching our resources, degrading our economy and moreover treated us like slaves…and as of now what do you think has changed????

The change is just the handover of the whip to our INDIAN ruling body, making us the modern slaves!

Honorable Ex. President of India Mr. Abdul Kalam assures India could become the world powerhouse by 2020, maybe he wasn’t aware that we would have already been the powerhouse minus the corruption.

One things for sure, people see no trust in this government.

The first independence movement was to free ourselves from the British corrupt era.

Now, the second independence movement is to free ourselves from our very own corrupt ruling body.

 

 

Comments are welcome!

ஜனவரி 15, 2011 / mullaimaravan

கடமை!!

சில தினங்களுக்கு முன்பு, உதயம் திரையரங்கம் அருகே எனது பால்ய நண்பன் ஒருவனை சந்திக்க நேர்ந்தது……… பல வருடங்களுக்கு பிறகு எற்பட்ட எதிர்பாராத சந்திப்பால் நேரம் மறந்து பழைய நினைவுகளை நினைவுக்கூர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்! நீண்டுக்கொண்டிருந்த எங்கள் உரையாடலுக்கிடையில் என் நண்பன் என்னிடம், “என்ன மச்சி எதாவது ஆலு கீலு (LOVER) செட் ஆயிடுச்சா??? என்று கேட்டான்…….. “இல்ல மச்சி நமக்கு இன்னும் கொடுத்து வைக்கல”, என்று தான் சொன்னேன்……. இவ்வாறு நான் கூறியதை கேட்டவுடன் எனது நண்பன் கொடுத்த எதிர்விளைவு (Reaction) என்னை “எதோ தப்பா சொல்லிட்டோமா???” என யோசிக்க வைத்தது!!!    சற்று தயக்கத்துடன் என்னவென்று அவனிடமே கேட்டதற்கு, “என்னடா சொல்ற! இன்னுமாடா உனக்கு ஆல் செட் ஆகல……..நம்ம பசங்க எல்லாருக்கும் ஆல் இருக்கு…கேக்குறதுக்கே அசிங்கமா இருக்கு டா” என்றான். அடப்பாவிங்களா லவ்வர் இல்லாதது ஒரு குற்றமாடா…..எதிர்பார்ப்பு இல்லாமலும் எதிர்பாராமலும் இரு மனம் இணைகின்ற தருணம் அர்ப்புதமான உணர்ச்சிகளாய் பூப்பதே காதல் என நான் எண்ணினால்….இவன் என்னடா காதலை அந்த அந்த வயதில் முடிக்க வேண்டிய கடமை போல சொல்கிறானே என மனதிற்குள் எண்ணிக்கொண்டு, அவனிடம் தொலைபேசி எண்னை வாங்கிக்கொண்டு விடைப்பெற்றேன்!!!

ஒக்ரோபர் 9, 2010 / mullaimaravan

Hello world!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

Follow

Get every new post delivered to your Inbox.